பிஎஸ்-III வாகனத் தடை பின்னடைவை ஏற்படுத்தவில்லை

பிஎஸ்-III வகை வாகன விற்பனைக்கான தடை அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு எவ்வித பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும்,
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, தலைமைச் செயல் அதிகாரி வினோத் கே.தாசரி.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, தலைமைச் செயல் அதிகாரி வினோத் கே.தாசரி.

பிஎஸ்-III வகை வாகன விற்பனைக்கான தடை அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு எவ்வித பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான வினோத் கே. தாசரி கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: வாகனத்திலிருந்து வெளியேறும் புகையை மறுசுழற்சி செய்யும் அதிநவீனத் தொழில்நுட்பத்தை உள்நாட்டில் வடிவமைத்து உருவாக்கிய பிஎஸ்-IV வகை என்ஜினை அறிமுகப்படுத்துவது பெருமையளிக்கிறது. 130 குதிரைத் திறனுக்கு மேற்பட்ட திறன் கொண்ட என்ஜின்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தும் நிறுவனம் அசோக் லேலண்ட். பிஎஸ்-III என்ஜின்களை மாற்றி பிஎஸ்-IV வகை என்ஜின்கள் பொருத்தும் வாகனங்களின் எண்ணிக்கை 10,644. சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பு கொண்ட பிஎஸ்-III என்ஜின்களை மேம்படுத்தி ரூ 2 லட்சம் வரை விற்பனை செய்ய முடிவதால், பிஎஸ்-III தடை அறிவிப்பு நிறுவனத்திற்கு எவ்விதப் பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com