டி.வி.எஸ். மோட்டார் லாபம் ரூ.126 கோடி

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.126.77 கோடி லாபம் ஈட்டியது.
டி.வி.எஸ். மோட்டார் லாபம் ரூ.126 கோடி

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.126.77 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
டி.வி.எஸ். மோட்டார் விற்பனை மூலம் சென்ற 2016-17-ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 3,139.22 கோடி வருவாய் ஈட்டியது. முந்தைய 2015-16-ஆம் நிதி ஆண்டில் ஈட்டிய வருவாய் ரூ.3,090.77 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 1.56 சதவீதம் அதிகமாகும்.
பி.எஸ்.-III வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான சலுகை மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனையில் ஏற்பட்ட சரிவு ஆகிய காரணங்களால் நிறுவனத்தின் லாபம் நான்காம் காலாண்டில் 6.80 சதவீதம் சரிவடைந்து ரூ.126.77 கோடியாக காணப்பட்டது.
சென்ற முழு நிதி ஆண்டில் வருவாய் ரூ.12,194.77 கோடியிலிருந்து 9.58 சதவீதம் அதிகரித்து ரூ.13,363.43 கோடியானது. நிகர லாபம் 14 சதவீதம் அதிகரித்து ரூ.558.1 கோடியானது.
அனைத்துப் பிரிவுகளிலான மாடல்களையும் மேம்படுத்திப் புதிதாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு நிதி ஆண்டில் வாகன விற்பனை சிறப்பான அளவில் அதிகரிக்கும் என்று டி.வி.எஸ். மோட்டார் அந்த அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com