மாருதி சுஸுகி லாபம் ரூ.1,709 கோடி

மாருதி சுஸுகி இந்தியாவின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.1,709 கோடியாக இருந்தது என அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா வியாழக்கிழமை தெரிவித்தார்.
மாருதி சுஸுகி லாபம் ரூ.1,709 கோடி

மாருதி சுஸுகி இந்தியாவின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.1,709 கோடியாக இருந்தது என அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சென்ற 2016-17-ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் மாருதி சுஸுகியின் நிகர விற்பனை 15 சதவீதம் அதிகரித்து 4,14,439 வாகனங்களாக இருந்தது. ஏற்றுமதி 31,771 என்ற எண்ணிக்கையில் காணப்பட்டது.
இதையடுத்து, நான்காம் காலாண்டு வருவாய் 20.3 சதவீதம் அதிகரித்து 18,005.2 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ.1,476.2 கோடியிலிருந்து 16 சதவீதம் உயர்ந்து ரூ.1,709 கோடியாக காணப்பட்டது.
சென்ற முழு நிதி ஆண்டில் வாகன விற்பனை 9.8 சதவீதம் அதிகரித்து 15,68,603-ஆக காணப்பட்டது. வாகனங்கள் ஏற்றுமதி 1,24,062-ஆக இருந்தது. இதையடுத்து அந்த நிதி ஆண்டில் வருவாய் 18.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.66,909.4 கோடியாக காணப்பட்டது.
ரூ.5 முகமதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.75 ஈவுத் தொகையாக வழங்க நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது
மாருதி சுஸுகி இந்தியா ரூ.23,000 கோடியை ரொக்க கையிருப்பாக கொண்டுள்ளது. இதனைக் கொண்டு நாடு தழுவிய அளவில் விற்பனை மற்றும் சேவை தொடர்புகளை கணிசமான அளவில் அதிகரிக்க உள்ளோம். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி ஏற்கெனவே தொடங்கி விட்டது.
தற்போதுள்ள அளவைக் காட்டிலும் விற்பனை எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுகளுக்குள் 30 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார் அவர்.
மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 2,200 விற்பனையகங்களும், 3,200 பராமரிப்பு சேவை மையங்களும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com