மாருதி சுஸுகியின் புதிய மாடல் கார் அறிமுகம்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, சொகுசுக் கார் பிரிவில் 'சியாஸ் எஸ்' என்ற புதிய மாடலை வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
மாருதி சுஸுகியின் புதிய மாடல் கார் அறிமுகம்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, சொகுசுக் கார் பிரிவில் 'சியாஸ் எஸ்' என்ற புதிய மாடலை வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மூத்த செயல் இயக்குநர் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) ஆர்.எஸ். கல்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
'சியாஸ் எஸ்' காரை அறிமுகப்படுத்தியதன் மூலம் சந்தையில் மாருதி சுஸுகியின் பங்களிப்பு மேலும் வலுப்படும். பிரீமியம் பிரிவு வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அறிந்து இப்புதிய மாடல் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோலில் இயங்கும் 'சியாஸ் எஸ்' புதிய மாடல் காரின் விலை ரூ.9.39 லட்சமாகவும், டீசலில் இயங்கும் மாடலின் விலை ரூ.11.55 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டீசல் மாடல் ஸ்மார்ட் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வந்துள்ளதால் அதிக எரிபொருள் சிக்கனத்துடன் லிட்டருக்கு 28.09 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும்.
செடன் பிரிவில் சியாஸ் வகை கார் விற்பனை நிறுவனத்துக்கு மிகவும் முக்கியமானது.
கடந்த 2014 அக்டோபரில் இவ்வகை கார் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரையில் 1.70 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் விற்பனையாகியுள்ளன என்று கல்சி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com