டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் எடிசன் அறிமுகம்

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில், இந்தியாவின் முன்னணி நிறுவனமான, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், முற்றிலும் புதிய டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் எடிஷன் எனும் புதிய வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் எடிசன் அறிமுகம்

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில், இந்தியாவின் முன்னணி நிறுவனமான, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், முற்றிலும் புதிய டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் எடிஷன் எனும் புதிய வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

யமஹா ஃபாசினோ, சுசூகி ஆக்சஸ் SE மற்றும் வெஸ்பா SLX போன்ற கிளாசிக் ஸ்டைல் மாடல்களுக்கு போட்டியாக டிவிஎஸ் நிறுவனம் இந்த மாடலை அறிமுகம் செய்துள்ளது.

‘சன்லிட் ஐவரி பாடி கலர், ‘கிளாசிக் எடிசன்’ டிகால்ஸ், நேர்த்தியான முழு குரோம் கண்ணாடிகள், அழகிய தோற்றம் கொண்ட குரோம் பேக்ரெஸ்ட் போன்ற புதுமையான அம்சங்கள் பலவற்றை இந்த கிளாசிக் எடிஷன் வழங்குகிறது.

எஸ்பிஎஸ் எனப்படும் நுட்பத்தினை பெற்றுள்ள ஜூபிடர் கிளாசிக் பின் பிரேக்கினை பயன்படுத்தும்போது முன் பிரேக்கினை தானாகவே ஆக்டிவேட் ஆகி பிரேக்கினை பிடிக்கும்.

டிவிஎஸ் நிறுவனத்தால் காப்புரிமை பெற்ற எக்னோமீட்டர் நுட்பத்தை பெற்றுள்ளதால் ஈகோ மோடு மற்றும் பவர் மோடு என இரண்டிலும் ஓட்டுநர்களுக்கு, இது வழிகாட்டல் வழங்குகிறது. எனவே எக்கோ மோடில் மிகச்சிறந்த எரிபொருள் சிக்கனத்தை இதன் இன்ஜின் தருகிறது.

மேலும் ஸ்மார்ட்டான யூஎஸ்பி சார்ஜர் மற்றும் சவாரி செய்ய அதிக சவுகரியமான இரட்டை நிற இருக்கை ஆகிய அம்சங்களும் இதில் கூடுதலாக இடம்பெற்றிருக்கின்றன.

ஜூபிடர் கிளாசிக் மாடலில் அடுத்த தலைமுறை 110 சிசி எஞ்சின் பொருந்த்தப்பட்டு 7.9 பிஹெச்பி ஆற்றலை 7500 rpm சுழற்சியிலும் 8 Nm டார்க்கினை வழங்க 5500 rpm இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 62 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

ரூ.55,266 (எக்ஸ்-ஷோரூம் – தில்லி) என்ற விலையில், டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் பதிப்பு இப்போது நாடெங்கிலும் டிவிஎஸ்-ன் அனைத்து டீலர்ஷிப்களிலும் கிடைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com