நானோவுக்கான மாற்றுத் திட்டங்களை ஆராய்கிறது டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸின் சிறிய வகை காரான நானோவின் விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் அதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சதீஷ் போர்வாங்கர்
நானோவுக்கான மாற்றுத் திட்டங்களை ஆராய்கிறது டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸின் சிறிய வகை காரான நானோவின் விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் அதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சதீஷ் போர்வாங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
நீண்ட காலத்துக்கு அதன் உற்பத்தியைத் தொடர முடியாத நிலையில்,நானோவுக்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து
தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறோம்.
நானோவை பொருத்தவரை அதன் உற்பத்தியை முழுமையாக கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கு, உணர்வுபூர்வமான காரணங்கள் உள்ளன. பங்குதாரர்களைப் பொருத்தவரையில் அதன் உற்பத்தியை தொடர வேண்டும் என்றே விரும்புகின்றனர். தற்போதைய நிலையில், மாதத்துக்கு 1,000 நானோ கார்கள் விற்பனையாகி வருகின்றன. சிங்கூர் ஆலை திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, உற்பத்தி வசதிகள் குஜராத்தில் உள்ள சனந்த் ஆலைக்கு டாடா மோட்டார்ஸ் மாற்றியது.
சனந்த் ஆலையில், நானோ, டியாகோ மற்றும் டிகோர் ஆகிய மூன்று பயணிகள் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. டியாகோ, டிகோர் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், நானோ கார் உற்பத்தி மிகக் குறைந்த அளவே மேற்கொள்ளப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் தேவையறிந்து அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், தேவைக்கு ஏற்ப வர்த்தக வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளிக்குள் புதிய எஸ்.யு.வி. மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று சதீஷ் போர்வாங்கர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com