ஹீரோ மோட்டார்ஸ் புதிய வரவான ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
ஹீரோ மோட்டார்ஸ் புதிய வரவான ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பல புதிய மாடல்களை அறிமுகம் செய்திருக்கும் இந்நிறுவனம் தற்போது ஃப்ளாஷ் என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ரூ.24,990 என்று விலையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணிக்கும் வகையிலான பேட்டரியின் திறன் பெற்றுள்ளது.

மேலும் ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 250 வாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிளாஷ் ஸ்கூட்டரில் 48V/20AH VRLA மின்கலன் பொருத்தப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 8 மணிநேரம் வரை தேவைப்படும். 87 கிலோ எடை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் எதிர்பாராமல் விபத்து ஏற்படும் சமயங்களில் மின்சார கசிவு ஏற்படாத வகையில் பேட்டரியில் இருந்து மின் இணைப்பினை துண்டிக்கும் வகையிலான சிறப்பு நுட்பத்தினை பெற்றுள்ளது.

தற்சமயம் இந்த ஸ்கூட்டருக்கு ரூ.14,000 வரை அரசு மானியமாக வழங்குகின்றது. இந்த ஸ்கூட்டருக்கு இரண்டு ஆண்டுகளுக்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது என்பது கூறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் 350க்கு மேற்பட்ட டீலர்களை கொண்டு ஹீரோ எலக்ட்ரிக் செயல்பட்டு வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com