டாடா மோட்டார்ஸின் "ஜெனான் யோதா' சரக்கு வாகனம் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் "ஜெனான் யோதா' புதிய சரக்கு வாகனத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
டாடா மோட்டார்ஸின் "ஜெனான் யோதா' சரக்கு வாகனம் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் "ஜெனான் யோதா' புதிய சரக்கு வாகனத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவின் செயல் இயக்குநர் ரவி பிஷரோடி தெரிவித்ததாவது:
 மினி-டிரக் பிரிவு வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ற வகையில் ஜெனான் யோதா சரக்கு வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலகு ரக வர்த்தக வாகன பிரிவில் இப்புதிய அறிமுகம் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

ஜெனான் யோதா சரக்கு வாகனத்தில் 3,000சிசி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பாரத் ஸ்டேஜ் 3 மற்றும் பாரத் ஸ்டேஜ் 4 என்ற இரண்டு பிரிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்களின் விலை முறையே ரூ.6.05 லட்சம் மற்றும் ரூ.6.19 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com