பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்ஸர் பைக் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்ஸர் 'என்எஸ்160' என்ற புதிய மாடல் பைக்கை புது தில்லியில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்ஸர் பைக் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்ஸர் 'என்எஸ்160' என்ற புதிய மாடல் பைக்கை புது தில்லியில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (மோட்டார் சைக்கிள் பிரிவு) எரிக் வாஸ் தெரிவித்ததாவது: இன்றைய சூழலில் ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகள் விற்பனையில் 70 சதவீதம் 150சிசி-160 சிசி மோட்டார்சைக்கிள்களே அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தப் பிரிவிலான வாடிக்கையாளர்களைக் குறிவைத்தே என்எஸ்160 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளோம். உயர் தரம், சர்வதேச வடிவமைப்பு மற்றும் செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பைக் ஒரு வரப்பிரசாதமாகும். இதன் மும்பை விற்பனையக விலை ரூ.80,648-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பல்ஸர் பைக் அறிமுகத்தின் மூலம் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் பிரிவில் வலுவான இடத்தை தக்க வைப்பதே எங்களின் முக்கியக் குறிக்கோள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com