இந்தியாவில் 64 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்க இலக்கு

இந்தியாவில் நிகழாண்டு 64 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் தலைவரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான மினோரு கட்டோ தெரிவித்தார்.
இந்தியாவில் 64 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்க இலக்கு

இந்தியாவில் நிகழாண்டு 64 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் தலைவரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான மினோரு கட்டோ தெரிவித்தார்.

இதுகுறித்து கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
உலக அளவில் இருசக்கர வாகனங்கள் அதிகம் விற்பனையாகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 2016-17இல் இந்தியாவில் 50 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளோம். 2017-18இல் 64 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹோண்டா வாகனங்களை இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறோம். மொத்த உற்பத்தியில் சுமார் 35 சதவீத வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் 2 மோட்டார் சைக்கிள், 2 ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளோம்.
இந்தியாவில் 2020-இல் பி.எஸ்-6 தரக்கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு ஏற்ப வாகனங்களைத் தயாரிக்கும்போது அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளுக்கு வேண்டுமானாலும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யலாம். இந்திய அளவில் இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஸ்கூட்டர்கள் விற்பனையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
தற்போது நாட்டில் மோட்டார் சைக்கிள்களை விட, ஸ்கூட்டர்களின் விற்பனை விகிதம் அதிகரித்து வருகிறது. ஹோண்டா நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் 405 விற்பனை மற்றும் பழுது பார்க்கும் மையங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு நிகழாண்டு கூடுதலாக 45 மையங்கள் தொடங்க உள்ளோம்.
கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து தொடங்கப்பட்ட போக்குவரத்துப் பூங்கா மூலம், வாகனங்களைப் பாதுகாப்பாக இயக்குவது குறித்து 14 ஆயிரம் பேருக்குப் பயிற்சி அளித்துள்ளோம் என்றார். இந்த சந்திப்பின்போது, அந்த நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் (விற்பனை) ஒய்.எஸ்.குலேரியா, இயக்குநர் ஹர்பஜன் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com