பல்வேறு மாடல் வாகனங்களின் விற்பனையை நிறுத்தியது ஹீரோ மோட்டோகார்ப்

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பல்வேறு மாடல் வாகனங்களின் விற்பனையை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பல்வேறு மாடல் வாகனங்களின் விற்பனையை நிறுத்தியது ஹீரோ மோட்டோகார்ப்

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பல்வேறு மாடல் வாகனங்களின் விற்பனையை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உயரதிகாரி கூறியுள்ளதாவது:
எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன தயாரிப்புகளில் மறுசீரமைப்பை வேகமாக மேற்கொண்டுள்ளோம். வருங்காலத்தில் பிரீமியம் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பிரிவில் அதிக கவனத்தைச் செலுத்தவுள்ளோம்.
கடந்த சில மாதங்களாகவே மேஸ்ட்ரோ ஸ்கூட்டர், பாஸன் எக்ஸ்ப்ரோ, ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாசிக் மற்றும் கரிஸ்மா ஆர் மோட்டார் சைக்கிள்கள் விற்பனையை நிறுத்தியுள்ளோம். இந்த நிலையில், இக்னிட்டர், ஹங்க், எச்எப் டான் மாடல் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேசமயம், கிளாமர், மேஸ்ட்ரோ எட்ஜ், டூயட் மற்றும் ப்ளஸர் மாடல்களின் புதிய தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
100சிசி மற்றும் 150சிசி பைக்குகள் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்கெனவே 50 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் மட்டும் ஆறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதில் இரண்டு தயாரிப்புகள் விழாக்கள் அதிகம் நிறைந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. முற்றிலும் சந்தைக்கு புதிய 200சிசி மோட்டார்சைக்கிள் "ஆட்டோ எக்ஸ்போ 2018' சமயத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர்.
சென்ற 2016-17 நிதி ஆண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை முன் எப்போதும் இல்லாத வகையில் 66,63,903-ஆக இருந்தது. 2015-16-இல் வாகன விற்பனை 66,32,322-ஆக காணப்பட்டது.
உள்நாட்டு சந்தையில் முன்னாள் பங்குதாரர் நிறுவனமான ஹோண்டாவின் போட்டியை ஹீரோ மோட்டோகார்ப் கடுமையாக எதிர் கொண்டு வருகிறது. வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 50 நாடுகளின் சந்தையில் புதிதாக நுழையவும், சர்வதேச அளவில் 20 தயாரிப்பு ஆலைகளை அமைக்கவும், ஆண்டு விற்றுமுதலை ரூ.60,000 கோடியாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.
கடந்த 2013-இல் 5 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டிய வாகன விற்பனையை 2020-க்குள் 10 கோடியாக அதிகரிக்க ஹீரோ மோட்டோகார்ப் இலக்கு நிர்ணயித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com