உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை சென்ற மே மாதத்தில் 8.63% வளர்ச்சி கண்டது.
உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை சென்ற மே மாதத்தில் 8.63% வளர்ச்சி கண்டது.

பயணிகள் வாகன விற்பனை 8% உயர்வு

உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை சென்ற மே மாதத்தில் 8.63% வளர்ச்சி கண்டது.

உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை சென்ற மே மாதத்தில் 8.63% வளர்ச்சி கண்டது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை சென்ற மே மாதத்தில் 2,51,642-ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 2,31,640 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 8.63 சதவீதம் அதிகமாகும்.
கார்கள் விற்பனை 1,58,996-லிருந்து அதிகரித்து 1,66,630-ஆகவும், மோட்டார் சைக்கிள் விற்பனை 9,84,715 என்ற எண்ணிக்கையிலிருந்து 7.72% வளர்ச்சி கண்டு 10,60,746-ஆகவும் இருந்தது.
மொத்த இருசக்கர வாகன விற்பனை 11.89% அதிகரித்து 16,94,325-ஆக காணப்பட்டது. அதேசமயம், வர்த்தகப் பயன்பாட்டு வாகன விற்பனை 6.36% குறைந்து 53,457-ஆக இருந்தது.
அனைத்து ரக மோட்டார் வாகன விற்பனை மே மாதத்தில் 18,49,542-லிருந்து 10.05% அதிகரித்து 20,35,490-ஆக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com