டிரையம்ப் நிறுவனத்தின் புதிய பைக் அறிமுகம்

டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய வகை 'ஸ்ட்ரீட் டிரிப்பிள் எஸ்' என்ற மோட்டார் சைக்கிளை புது தில்லியில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
புது தில்லியில் புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்யும் டிரையம்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விமல் சம்ப்ளி.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விமல் சம்ப்ளி தெரிவித்ததாவது: டிரையம்ப் நிறுவனத்தின் 'ஸ்ட்ரீட் டிரிப்பிள் எஸ்' என்ற புதிய ரக மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 765-சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புது தில்லியில் இதன் விற்பனையக விலை ரூ.8.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5 பல்வேறு பிரிவுகளில் 16 மாடல்களில் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையாகின்றன. அதில், 20 சதவீதம் மட்டுமே மானேஸர் ஆலையில் ஒருங்கிணைக்கப்படுபவை. பெரும்பாலான தயாரிப்புகள் தாய்லாந்து மற்றும் பிரிட்டனிலிருந்து இறக்குமதியாகின்றன. இந்தியாவில் ஆலைகள் அமைக்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் 90 சதவீத தயாரிப்புகளை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்யவுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com