ஹீரோ மோட்டோகார்ப் தலைவருக்கு ரூ.59 கோடி ஊதியம்

இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சாலுக்கு சென்ற நிதி ஆண்டுக்கு ரூ.59.66 கோடி ஊதியம் வழங்கப்பட்டது.
ஹீரோ மோட்டோகார்ப் தலைவருக்கு ரூ.59 கோடி ஊதியம்

இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சாலுக்கு சென்ற நிதி ஆண்டுக்கு ரூ.59.66 கோடி ஊதியம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநரும் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் முஞ்சாலுக்கு சென்ற 2016-17-ஆம் நிதி ஆண்டுக்கு ஊதியமாக ரூ.59.66 கோடி வழங்கப்பட்டது. 2015-16-ஆம் நிதி ஆண்டில் வழங்கிய ஊதியத்துடன் ஒப்பிடுகையில் இது 3.94 சதவீதம் அதிகமாகும்.
ஹீரோ மோட்டோகார்பின் செயல் இயக்குநராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி பொறுப்பேற்ற விக்ரம் எஸ். காஸ்பிகருக்கு ரூ.2.22 கோடி ஊதியம் அளிக்கப்பட்டதாகவும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com