டாப் 10 கார் விற்பனையில் மாருதி சுஸுகியின் 7 மாடல்கள்

சென்ற மே மாதத்தில் உள்நாட்டில் டாப் 10 பயணிகள் கார் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 7 மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
டாப் 10 கார் விற்பனையில் மாருதி சுஸுகியின் 7 மாடல்கள்

சென்ற மே மாதத்தில் உள்நாட்டில் டாப் 10 பயணிகள் கார் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 7 மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (எஸ்.ஐ.ஏ.எம்) திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற மே மாதத்தில் விற்பனையான முதல் 10 பிராண்டுகளில் மாருதி சுஸுகியின் ஆல்டோ மாடல்
முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 19,874-ஆக காணப்பட்ட இந்த மாடல் கார் விற்பனை நடப்பாண்டு இதே கால அளவில் 23,618-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மாடல் 16,532 கார்கள் விற்பனையாகி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவை தவிர, மாருதி சுஸுகியின் வேகன் ஆர் (15,471 கார்கள்), பலேனோ (14,629 கார்கள்) மாடல்கள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 மாடல் (12,984 கார்கள்) ஐந்தாவது இடத்தையும், மாருதி சுஸுகியின் விஸ்டாரா ப்ரெஸ்ஸா (12,375 கார்கள்) ஆறாவது இடத்தையும், ஹூண்டாயின் எலைட் ஐ20 (10,667 கார்கள்) ஏழாவது இடத்தையும், மாருதி சுஸுகியின் டிசையர் (9,073 கார்கள்) எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. கடைசி இரண்டு இடங்களில் ஹூண்டாயின் கிரெட்டா (8,377 கார்கள்), மாருதி சுஸுகியின் எர்டிகா (7,121) மாடல் உள்ளன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸுகியின் டிசையர் டூர், செலிரியோ, டொயோட்டாவின் இன்னோவா மாடல்கள் டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை என எஸ்.ஐ.ஏ.எம். தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com