உதிரிபாகத்தில் பழுது: 4 லட்சம் வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது ஃபோர்டு

உதிரிபாகங்களில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட "டிரான்ஸிட்" ரக வேன்கள் மற்றும் பேருந்துகளை திரும்பப் பெறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
உதிரிபாகத்தில் பழுது: 4 லட்சம் வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது ஃபோர்டு

உதிரிபாகங்களில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட "டிரான்ஸிட்" ரக வேன்கள் மற்றும் பேருந்துகளை திரும்பப் பெறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2015 முதல் 2017 வரையில் வட அமெரிக்காவில் விற்பனை செய்த வேன்கள், பேருந்துகள் மற்றும் நடுத்தர, நீண்ட , பெரிய அளவிலான சக்கரங்களுடன் கூடிய சரக்கு வாகனங்களில் டிரைவ் ஷாஃப்டில் உள்ள இணைப்புகளில் காணப்படும் விரிசல்களால் மின் இணைப்பு துண்டிக்கப்படலாம் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், அதனைச் சுற்றியுள்ள பாகங்களான பிரேக் மற்றும் எரிபொருள் செல்லும் குழாய்களிலும் அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதுவரையில் இப்பிரச்னைகள் காரணமாக விபத்து எதுவும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. இருப்பினும் வாடிக்கையாளர்கள் நலன் கருதி 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்த ரக வாகனங்களில் பிரச்னைக்குரிய பாகங்களை மாற்றித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண உதிரிபாகங்களை மேம்படுத்தும் பணிகளில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதடைந்த பாகங்களை மாற்றி சரி செய்து தரும் இந்த திட்டத்தால் நிறுவனத்துக்கு 14.2 கோடி டாலர் (ரூ.900 கோடி) செலவு பிடிக்கும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com