மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ஆக்டிவா 4ஜி அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு தரச் சான்று பெற்ற புதிய இஞ்சினுடன் ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம். இவை தற்போது விற்பனைக்கு வந்துவுள்ளது.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப ஹோண்டா ஆக்டிவா அறிமுகம் செய்துயுள்ளது. மேலும் ஹோண்டாவின் ஆக்டிவா 4G ஸ்கூட்டரில் 109சிசி திறன் கொண்ட ஹோண்டா இகோ டெக்னாலாஜி (HET) இன்ஜினுடன் 8bhp பவரை வெளிப்படுத்தும் V-matic கியர்பாக்சினை பெற்றுள்ளது.

புதிய ரீடிசைன் செய்யப்பட்ட ஆக்டிவா 4ஜி-ல் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி இடம்பெற்றுள்ளன. இதில் AHO எனப்படும் தானியங்கி முகப்பு விளக்கும் இடம்பெற்றுள்ளது.

மேட் சில்வர் மெட்டாலிக், மேட் கிரே மெட்டாலிக் போன்ற புதிய நிறங்களுடன் நீலம் மெட்டாலிக், சிவப்பு மெட்டாலிக், கருப்பு, வெள்ளை மற்றும் பிரவுன் மெட்டாலிக் போன்ற 7 வண்ணங்களுடன் ஆக்டிவா ஸ்கூட்டர் தற்போது சந்தையில் கிடைக்கும்.

ஆக்டிவாவின் புதிய நான்காம் தலைமுறை ஸ்கூட்டர் ரூ.50,730 (தில்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com