இந்தியாவில் வாகன விற்பனை நிறுத்தம்; ஏற்றுமதியில் கவனம்': ஜெனரல் மோட்டார்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் (ஜி.எம்.) நிறுவனம் இந்தியாவில் வாகன விற்பனையை நிறுத்த முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் வாகன விற்பனை நிறுத்தம்; ஏற்றுமதியில் கவனம்': ஜெனரல் மோட்டார்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் (ஜி.எம்.) நிறுவனம் இந்தியாவில் வாகன விற்பனையை நிறுத்த முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
எதிர்கால தயாரிப்பு திட்டங்கள் குறித்தும், சர்வதேச அளவில் செயல்பாடுகள் குறித்தும் ஜெனரல் மோட்டார்ஸ் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. அதன் ஒருபகுதியாகவே, தற்போது, இந்தியாவில் வாகன விற்பனையை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக குஜராத் மாநிலம் ஹாலோல் நகரில் நிறுவனம் அமைத்த முதல் ஆலையில் கடந்த மாதம் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.
வாகன விற்பனையை நிறுத்த முடிவெடுத்த நிலையில், மகாராஷ்டிரத்தில் உள்ள தாலேகான் ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் முழு கவனமும் செலுத்தப்பட உள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜி.எம். நிறுவனத்தின் ஹாலோல் ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 1,100 பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அந்த ஆலையை சீனாவின் செயிக் மோட்டார் கார்ப்பரேஷனுக்கு விற்பனை செய்வது குறித்து ஜி.எம். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
ஜெனரல் மோட்டார்ஸின் ஷெவர்லே பீட், தற்போது மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com