டாடா மோட்டார்ஸ் லாபம் ரூ.4,336 கோடி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.4,336.43 கோடியாக இருந்தது.
டாடா மோட்டார்ஸ் லாபம் ரூ.4,336 கோடி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.4,336.43 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற நிதி ஆண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-ஆவது காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.77,272 கோடி வருவாய் ஈட்டியது. 2015-16 நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.79,549 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவான அளவாகும்.
இந்திய ரூபாய்- பிரிட்டிஷ் பவுண்ட் கரன்ஸி மதிப்பு இடையிலான ஏற்ற இறக்கங்களால் ரூ.9,032 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகர லாபம் ரூ.5,211.49 கோடியிலிருந்து சரிந்து ரூ.4,336.43 கோடியானது.
டாடா மோட்டார்ஸின் ஜாகுவர் லேண்ட் ரோவர் (ஜே.எல்.ஆர்) கார்கள் விற்பனை நான்காம் காலாண்டில் 13 சதவீதம் அதிகரித்தது.
2016-17 நிதி ஆண்டில் வருவாய் ரூ.2,73,111 கோடியிலிருந்து சரிந்து ரூ.2,69,850 கோடியாகவும், நிகர லாபம் ரூ.11,678 கோடியிலிருந்து வீழ்ச்சியடைந்து ரூ.7,557 கோடியாகவும் இருந்தது என டாடா மோட்டார்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com