1.2 மில்லியன் கார்களை திரும்பப் பெறுகிறது நிசான் நிறுவனம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1.2 மில்லியன் கார்களை நிசான் நிறுவனம் திரும்பப் பெறுகிறது.
1.2 மில்லியன் கார்களை திரும்பப் பெறுகிறது நிசான் நிறுவனம்

ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமாக நிசான் திகழ்கிறது. இங்கிருந்து உலகம் முழுவதும் ஏராளமான கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜப்பானில் வெளியான கார்களை திரும்பப் பெற நிசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2017 வரை உற்பத்தி செய்யப்பட்ட 1.2 மில்லியன் கார்களை நிசான் நிறுவனம் திரும்பப் பெறுகிறது.

இதன்காரணமாக நிசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஜப்பான் நாட்டில் கடுமையாகச் சரிந்துள்ளது.

ஜப்பானில் அமல்படுத்தப்பட்ட கார்களின் தரம் தொடர்பான அளவுக்கு நிசான் நிறுவனத்தின் இந்தக் கார்கள் இல்லை என்பது தெரியவந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக 3-ஆம் தனிநபர் குழுவை வைத்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சிக்கல்களுக்கு ஜப்பான் மக்களிடத்தில் நிசான் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com