டி.வி.எஸ். எக்ஸ்.எல்.100 ஹெவி டியூட்டி: இருசக்கர சரக்கு வாகனம் அறிமுகம்

டி.வி.எஸ். நிறுவனத்தின் எக்ஸ்.எல். 100 ஹெவி டியூட்டி வாகனம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டி.வி.எஸ். எக்ஸ்.எல்.100 ஹெவி டியூட்டி: இருசக்கர சரக்கு வாகனம் அறிமுகம்

டி.வி.எஸ். நிறுவனத்தின் எக்ஸ்.எல். 100 ஹெவி டியூட்டி வாகனம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தப் புதிய மாடல் இருசக்கர வாகனத்தை டி.வி.எஸ். நிறுவனத்தின் துணைத் தலைவர் (பயன்பாட்டு வாகனங்கள் பிரிவு) எஸ். வைத்தியநாதன் அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டி.வி.எஸ். எக்ஸ்.எல்.100 அறிமுகப்படுத்தப்பட்ட 18 மாதங்களில் 10 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் டி.வி.எஸ். எக்ஸ்.எல். வகையில் மொத்தம் சுமார் 1.25 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனம் எனும் சிறப்பையும் பெற்றுள்ளது. இதையடுத்து, தற்போது ஹெவி டியூட்டி ரகத்தை அறிமுகம் செய்திருக்கிறோம். நீடித்து உழைக்கக் கூடிய, நேர்த்தியான செயல் திறனை உறுதி செய்யும் வாகனம் இது.
பி.எஸ். 4 தரக்கட்டுப்பாடு விதிகளுக்கு உள்பட்ட கொண்ட 99.7 சி.சி. நான்கு ஸ்ட்ரோக் என்ஜின் கொண்டது இந்த மாடல். 
பின்புற சக்கரத்தில் 20 சதவீதம் அதிக பருமனில் ஸ்போக் மற்றும் ரிம் பொருத்தப்பட்டுள்ளதால் மிக உறுதியான, உயர்வான செயல் திறனுக்கு உதவுகிறது. நீடித்த உழைப்பையும் உறுதி செய்கிறது. பின்புற இருக்கையை அகற்றி மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். பகல் நேரங்களிலும் இயங்கும் வசீகரமான எல்.இ.டி. முகப்பு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. பச்சை, கருப்பு, சிவப்பு, நீலம், டைட்டேனியம் கிரே, காப்பர் ஷைன் வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விற்பனையக விலை ரூ. 32,454-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டி.வி.எஸ். எக்ஸ்.எல்.100, டி.வி.எஸ். எக்ஸ்.எல்.100 கம்ஃபர்ட், டி.வி.எஸ். எக்ஸ்.எல்.100 ஹெவி டியூட்டி ஆகிய 3 மாடல்கள் தற்போது விற்பனையாகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com