ஆடி நிறுவனத்தின் புதிய கியூ7 கார் அறிமுகம்

ஆடி நிறுவனத்தின் புதிய கியூ7 சொகுசு கார் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
ஆடி நிறுவனத்தின் புதிய கியூ7 கார் அறிமுகம்

ஆடி நிறுவனத்தின் புதிய கியூ7 சொகுசு கார் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ரகீல் அன்சாரி தெரிவித்ததாவது:
புதிய ஆடி கியூ7 காரில் 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 252 குதிரைத் திறனுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 கி.மீ. வேகத்தை வெறும் 6.9 விநாடிகளில் அடைய முடியும்.
மேலும், கியூ7 கார் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. அதன்படி, பின்பக்க இருக்கைகள் உள்பட எட்டு காற்றுப் பைகள், சாலைகளுக்கான ஆங்கிள் சென்சார் வசதி, பார்க்கிங் செய்வதற்கு வசதியாக எல்லா திசையிலும் சுழலக்கூடிய கேமரா, டயர் காற்றழுத்த கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இப்புதிய காரின் விலை ரூ.67.76 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் வியப்பூட்டும் வகையில் மேலும் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com