நவீன தொழில்நுட்ப மோட்டார் சைக்கிள் அறிமுகம்

யுஎம் இந்தியா நிறுவனம் சார்பில் புதிய தொழில்நுட்பங்களுடன் ரெனிகெடா மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.
நவீன தொழில்நுட்ப மோட்டார் சைக்கிள் அறிமுகம்

யுஎம் இந்தியா நிறுவனம் சார்பில் புதிய தொழில்நுட்பங்களுடன் ரெனிகெடா மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.

பெங்களூரில் வியாழக்கிழமை ரெனிகெடா மொஜாவே, கமண்டோ கிளாஸிக் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்து வைத்த அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜோஸ்வில்லிகாஸ் பேசியது:
இந்தியாவில் இரு சக்கர வாகனங்களை இளைஞர்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ஆடம்பரமான, புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் ரெனிகெடா மொஜாவே, கமண்டோ கிளாஸிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளோம்.

ஒரு சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் வசதியுள்ள என்ஜின், எளிதாக கையாளும் வகையில் உள்ள இந்த மோட்டார் சைக்கிளின் விலை பெங்களூரில் ரூ. 1.9 லட்சம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com