மாருதி சுசூகி: ஆட்டோ கியர் ஷிப்ட் சோதனை ஓட்டம்

மாருதி சுசூகி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆட்டோ கியர் ஷிப்ட் சோதனை ஓட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.
மாருதி சுசூகி: ஆட்டோ கியர் ஷிப்ட் சோதனை ஓட்டம்

மாருதி சுசூகி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆட்டோ கியர் ஷிப்ட் சோதனை ஓட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள மெட்ரோ ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள மைதானத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனை ஓட்டத்தில், வேகத் தடைகள், திடீர் வளைவு ஆகியவற்றைக் கொண்ட சவாலான பாதை அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு இடையே சோதனை நடத்தப்பட்டது.
இந்த முகாமில், மாருதி வாகனங்களை வைத்துள்ள மற்றும் வாங்க விரும்புபவர்கள் கலந்து கொண்டு சவாலான பாதையில், ஆட்டோ கியர் ஷிப்ட் முறையில் வாகனத்தை இயக்கி பயிற்சி பெற்றனர். 
இந்தப் பயிற்சியை மாருதி சுசூகி நிறுவனத்தின் மண்டல விற்பனைப் பிரிவு மேலாளர்கள் நவீன் ரிச்சர்ட், கெளஷிக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com