புதிய அறிமுகங்களில் ஹோண்டா தீவிரம்

ஹோண்டா கார்ஸ் இந்தியா உள்நாட்டில் சந்தைப் பங்களிப்பை அதிகரிக்க புதிய வியூகங்களை வகுத்து வருகிறது
புதிய அறிமுகங்களில் ஹோண்டா தீவிரம்

ஹோண்டா கார்ஸ் இந்தியா உள்நாட்டில் சந்தைப் பங்களிப்பை அதிகரிக்க புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடப்பு நிதி ஆண்டிலேயே 3 புதிய மாடல்களில் கார்களை அறிமுகப்படுத்தும் பணிகளில் அந்நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
 கடந்த 2016-17 நிதி ஆண்டில் கார் விற்பனை 1,57,313-ஆக இருந்தது. ஹோண்டா எடுத்த சீரிய முயற்சிகளால், இது அடுத்த 2017 -18 நிதி ஆண்டில் 8 சதவீதம் அதிகரித்து 1,70,026-ஐத் தொட்டது. இந்த நிலையில் விற்பனை எண்ணிக்கையை பன் மடங்கு அதிகரிக்கத் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 இதற்காக, அடுத்த மாதத்தில் நவீன தொழில்நுட்பத்திலான புதிய ரக அமேஸ் காரை அறிமுகம் செய்யவுள்ளோம். அதன்பிறகு, இரண்டாவது அரையாண்டு காலத்தில் சொகுசு கார்களான சிஆர்-வி மற்றும் சிவிக் செடன் பிரிவில் 10-ஆம் தலைமுறைக்கான புதிய மாடல் அறிமுகமாகும் என்கிறார் அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் மற்றும் விற்பனை பிரிவு இயக்குநருமான ராஜேஷ் கோயல்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com