அமெரிக்காவில் அறிமுகமாகவிருக்கும் பறக்கும் கார்! (விடியோ)

ஹாலிவுட் படங்களில் தான் இத்தகைய கார்களை முன்பு பார்த்திருப்போம். ஆனால் தற்போது அமெரிக்காவில் பறக்கும் கார் நிஜத்திலேயே அறிமுகமாகிறது.
அமெரிக்காவில் அறிமுகமாகவிருக்கும் பறக்கும் கார்! (விடியோ)

ஹாலிவுட் படங்களில் தான் இத்தகைய கார்களை முன்பு பார்த்திருப்போம். ஆனால் தற்போது அமெரிக்காவில் பறக்கும் கார் நிஜத்திலேயே அறிமுகமாகிறது. விரைவில் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கனடிய நிறுவனமான ஓபனர் தயாரித்துள்ள ‘ப்ளாக் ஃப்ளை’ (Black Fly) என்ற பறக்கும் கார்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அறிமுகமாகிறது. இந்தக் காரை ஓட்ட பைலட் லைசென்ஸ் தேவையில்லை, ஆனால் இதை இயக்க சில பிரத்யேக பயிற்சிகளையும், இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டும்.

Automatic வகையில் தானாகவே இயங்கும்படியும் இது அமைக்கப்பட்டுள்ளது இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பறக்கும் கார்களின் விலை மிக அதிகம். ஆனால் தற்போது குறைந்த விலையில், மணிக்கு 62 மைல்கள் வேகத்தில் இயங்கும் இந்தக் கார் அனைவரின் கவனத்தை கவரும் என்பது நிச்சயம்.

12000 மைல்கள் பறந்து டெஸ்ட் ட்ரைவ் முடிந்த நிலையில் உள்ள இந்த ப்ளாக் ஃப்ளை ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டுத் தோட்டத்தின் புல் தரையிலிருந்து கூட இந்தக் காரை டேக் ஆஃப் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com