தெலங்கானாவில் புதிய அனல் மின் திட்டம்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

தெலங்கானா சிறப்பு அனல் மின் திட்டத்தின் முதல் ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா ராமகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.
தெலங்கானாவில் புதிய அனல் மின் திட்டம்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

தெலங்கானா சிறப்பு அனல் மின் திட்டத்தின் முதல் ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா ராமகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

தேசிய அனல் மின் கழகத்தின் (என்டிபிசி) கீழ் செயல்படுத்தப்படும் இந்த அனல் மின்நிலையம், நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் இரண்டாவது மிகப் பெரிய திட்டமாகும்.

ரூ.10,600 கோடி மதிப்பிலான இத் திட்டத்தின் கீழ் இரண்டு ஆலைகள் கட்டப்படவுள்ளன. அவற்றுள் முதல் ஆலை 1600 மெகா வாட் மின்சாரமும், இரண்டாவது ஆலை 2400 மெகா வாட் மின்சாரமும் தயாரிக்கும் திறன் கொண்டவையாகும்.

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் உறுதியளித்தபடி, புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தில் 4000 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் என்டிபிசி-க்கு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ராமகுண்டத்தில் ஏற்கெனவே உள்ள என்டிபிசி மின் திட்ட வளாகத்திலேயே தெலங்கானா சிறப்பு மின் நிலையத் திட்டத்துக்கும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மின் திட்டத்துக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இவ்விழாவில், ஆந்திர/தெலங்கானா ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் மத்திய எரிசக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை இணையமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com