அசோக் லேலண்டு வாகன விற்பனை 7% அதிகரிப்பு

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்டு நிறுவனத்தின் நவம்பர் மாத வாகன விற்பனை 7 சதவீதம் அதிகரித்தது.

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்டு நிறுவனத்தின் நவம்பர் மாத வாகன விற்பனை 7 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
அசோக் லேலண்டு நிறுவனம் சென்ற நவம்பர் மாதத்தில் 9,574 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 8,971 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகமாகும்.
கனரக மற்றும் நடுத்தரப் பிரிவு வர்த்தக வாகனங்கள் விற்பனை 6,297 என்ற எண்ணிக்கையிலிருந்து 10 சதவீதம் அதிகரித்து 6,928-ஆக இருந்தது. இருப்பினும், இலகுரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 1 சதவீதம் குறைந்து 2,646-ஆக காணப்பட்டது என்று அசோக் லேலண்டு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com