ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சலுகைகள் மார்ச் வரை நீட்டிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்த இலவச அழைப்பு மற்றும் இலவச இணையதள சேவை ஆகிய சலுகைகளை வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சலுகைகள் மார்ச் வரை நீட்டிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்த இலவச அழைப்பு மற்றும் இலவச இணையதள சேவை ஆகிய சலுகைகளை வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இலவச அழைப்புகள், இலவச இணையதளச் சேவைகள் என பல்வேறு அறிவிப்புகளுடன் 4ஜி சேவையை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது.
மேலும், தனது 4ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்கள் வரையில் அழைப்புகளும், இணையதளச் சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஜியோ நிறுவனம் அறிவித்தது. இதனால், மூன்றே மாதங்களில் சுமார் 5 கோடி பேர் ஜியோ சிம் அட்டையை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, ஜியோ நிறுவனம் அறிவித்த இலவச சலுகைகள் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதாக இருந்தது.
இந்நிலையில், இந்தச் சலுகைகளை மார்ச் 31-ஆம் தேதி வரை ஜியோ நிறுவனம் தற்போது நீட்டித்துள்ளது. ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ஸ்கைப் ஆகிய நிறுவனங்களின் வளர்ச்சியை வெறும் மூன்றே மாதங்களில் ஜியோ நிறுவனம் முறியடித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்பு மற்றும் இலவச இணையதள சேவைகளை வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்திருக்கிறோம். டிசம்பர் 4-ஆம் தேதி முதல் ஜியோ சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சலுகை உண்டு என்றார் முகேஷ் அம்பானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com