டாடா ஜெஸ்ட் காருக்கு 4-நட்சத்திர மதிப்பீடு!

நிலையான காற்றுப்பை அல்லாத டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜெஸ்ட் ரக கார்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுக்காக நான்கு நட்சத்திர மதிப்பீட்டை குளோபல் என்.சி.ஏ.பி. அமைப்பு வழங்கியுள்ளது.
டாடா ஜெஸ்ட் காருக்கு 4-நட்சத்திர மதிப்பீடு!

நிலையான காற்றுப்பை அல்லாத டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜெஸ்ட் ரக கார்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுக்காக நான்கு நட்சத்திர மதிப்பீட்டை குளோபல் என்.சி.ஏ.பி. அமைப்பு வழங்கியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த குளோபல் என்.சி.ஏ.பி. அமைப்பு சர்வதேச அளவில் வெளியாகும் புதிய கார்களில் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை மதிப்பீடு செய்து அதற்கேற்றவாறு நட்சத்திரக் குறியீட்டை வழங்கி வருகிறது.
நிலையான காற்றுப்பை அல்லாத ஜெஸ்ட் ரக கார்களில் முன்பு இந்த நிறுவனம் நடத்திய விபத்து பரிசோதனையில் பயணிகள் பாதுகாப்பில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அதற்கு ஜீரோ நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியது.
இதையடுத்து, டாடா நிறுவனம் அனைத்து ஜெஸ்ட் ரக கார்களிலும் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டது.
இந்த நிலையில், இரண்டு காற்றுப் பைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெஸ்ட் ரக கார்களில் நடத்திய விபத்து பரிசோதனையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதையடுத்து அந்த வகை கார்களுக்கு குளோபல் என்.சி.ஏ.பி. அமைப்பு 4 நட்சத்திர மதிப்பீட்டை வழங்கி சிறப்பித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் "கியூட்' சிறிய நான்கு சக்கர வாகனத்துக்கு குளோபல் என்.சி.ஏ. அமைப்பு ஒரு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பிரபல மாடல்களான மாருதி செலரியோ, ரெனோவின் கிவிட், மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ஹுண்டாயின் இயான் உள்ளிட்ட ஐந்து வகையான கார்கள் விபத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவை தோல்வியடைந்து ஜீரோ நட்சத்திர அந்தஸ்தை மட்டுமே பெற்றன.
டாடா நிறுவனம் கடந்த 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விபத்து பரிசோதனை செய்யும் மையத்தை சொந்தமாகத் தொடங்கியது. இதையடுத்து, இந்திய மோட்டார் வாகனத் துறை வரலாற்றில் விபத்து பரிசோதனை வசதியை ஏற்படுத்திய முதல் நிறுவனம் என்ற பெருமையை டாடா பெற்றது.
தற்போது இந்த நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த 150 பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com