தங்க பத்திர சேமிப்புத் திட்டம்: கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி அறிவிப்பு

நிகழாண்டுக்கான (2017-18) தங்க பத்திர சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு அஞ்சல்துறை, கிராம் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி அறிவித்துள்ளது.

நிகழாண்டுக்கான (2017-18) தங்க பத்திர சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு அஞ்சல்துறை, கிராம் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறையின் சார்பில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஞ்சல் துறை மூலம் அஞ்சலகங்களில் தங்க பத்திர சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நிகழாண்டுக்கான முதலாவது தங்க பத்திர சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் திங்கள்கிழமை (ஏப், 24) முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் முதலீடு செய்ய அணுகலாம்.
இத்திட்டத்துக்கு கிராம் ஒன்றுக்கு ரூ 2,901 என இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. தனி நபர் ஒருவர் குறைந்தது ஒரு கிராமும், அதிகபட்சமாக 500 கிராம் வரை மட்டுமே சேமிப்புப் பத்திரத்தில் முதலீடு செய்ய முடியும்.
தற்போது சந்தையில் ஒரு கிராம் தங்கம் ரூ.2,951-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தங்க பத்திர சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு கிராம் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை பொது மக்கள், பல்கலைக்கழகங்கள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை பயன்படுத்தி பலன் அடையுமாறு அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com