"குர்குரே' புதிய சுவைகளில் அறிமுகப்படுத்தத் திட்டம்

பெப்சிகோ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான "குர்குரே'வை பல்வேறு புதிய சுவைகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

பெப்சிகோ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான "குர்குரே'வை பல்வேறு புதிய சுவைகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
மேலும், பிளாஸ்டிக் கலப்பு இருப்பதாக எழுந்த சர்ச்சையால் தென்னிந்தியாவில் அதன் விற்பனை சரிவடைந்த நிலையில், அதை ஈடுகட்டுவதற்குப் பல்வேறு திட்டங்களை எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் ஸ்நாக்ஸ் பிரிவு துணைத் தலைவர் ஜாக்ருத் கோட்டேச்சா தினமணிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: "குர்குரே'வில் பிளாஸ்டிக் கலப்பு இல்லை என்பதைத் தெளிவுபடுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எந்தெந்த பொருள்களைக் கொண்டு "குர்குரே' தயாரிக்கப்படுகின்றன என்பதை அதன் பாக்கெட்டுகளின் முகப்பிலேயே குறிப்பிட்டுள்ளோம். இத்தகைய தொடர் முயற்சிகளால் தற்போது விற்பனை விகிதம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் உணவுப் பழக்கவழக்கத்துக்கு ஏற்ப புதிய சுவைகளில் "குர்குரே'வை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, தென்னிந்திய சுவைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். கொல்கத்தாவில் உள்ள "டோரிடோ' நொறுக்குத் தின்பண்ட உற்பத்தி ஆலையில் ரூ.100 கோடி முதலீடு செய்யவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்றார் அவர்.
நாடு முழுவதும் அதிகம் விற்பனையாகும் நொறுக்குத் தின்பண்டமான "குர்குரே'வில் பிளாஸ்டிக் கலப்பு இருப்பதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. ஆனால், அதனைத் திட்டவட்டமாக மறுத்த பெப்சிகோ நிறுவனம், தங்களது தயாரிப்புகள் அனைத்தும் வேளாண் விளைபொருள்களைக் கொண்டு மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிவித்தது.
இந்த சர்ச்சைகள் அதன் விற்பனையை பெரிதும் பாதித்தன. குறிப்பாக, தென்னிந்தியாவில் "குர்குரே'வின் சந்தை பங்களிப்பு சரிந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, விற்பனையைப் பெருக்கவும், வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பெப்சிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com