உணவு பதப்படுத்துதல் துறை

இது டிஜிட்டல் யுகம். அரசுத் துறைகளும், பல்வேறு நிறுவனங்களும் தங்களது சேவைகளையும் திட்டங்களையும் இணைய வழியிலும் வழங்கி வருகின்றன.
உணவு பதப்படுத்துதல் துறை

இது டிஜிட்டல் யுகம். அரசுத் துறைகளும், பல்வேறு நிறுவனங்களும் தங்களது சேவைகளையும் திட்டங்களையும் இணைய வழியிலும் வழங்கி வருகின்றன. அவற்றில், மத்திய உணவு பதப்படுத்துதல் துறையும் அடக்கம். அதன் வலைதளம் <ஜ்ஜ்ஜ்.ம்ர்ச்ல்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்> . இந்த வலைதள முகவரியில் அந்தத் துறையின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. உணவு பதப்படுத்துதல் துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்த வலைதளத்தில் ஏராளமான விவரங்கள் உள்ளன. அதில் சில...
இத்துறையின் கீழ், ஹரியாணா மாநிலம், குந்த்லி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (என்.இ.எஃப்.டி.இ.எம்.) உணவுபதப்படுத்துதல் துறைக்கான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அளித்து வருகிறது.
விவசாயப் பொருட்கள் அழுகி வீணாவதைக் குறைப்பதில் இந்தத் துறை முக்கியப் பங்காற்றி வருகிறது. மேலும், உணவு உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை அதிகரித்தல், விவசாயத் துறையில் வணிகத்தைப் பெருக்குதல், விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் உள்ளிட்டவற்றுக்கு உதவும் ஒருங்கிணைந்த பணிகளைச் செய்து வருகிறது.
உணவு பதப்படுத்துதல் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு முறைகளால் நவீன தொழில்நுட்பத்தை அதிகப்படுத்தும் வழிமுறைகளை அறிமுகம் செய்வது இத்துறையின் குறிப்பிடத்தக்க பணி.
உணவு பதப்படுத்துதல் துறையில் பெருகி வரும் நிர்வாகிகள், தொழில்முனைவோர், திறன் வாய்ந்த ஊழியர்களின் தேவைக்கேற்ப மனிதவளத்தை மேம்படுத்தும் பயிற்சிகளுக்கு உதவி அளித்து வருகிறது.
உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட விரும்பும் தொழிலதிபர்கள், அரசு சாரா அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், தனியார் அமைப்புகளுக்கு பதப்படுத்துதல், பேக்கேஜிங் போன்றவற்றில் ஆலோசனைகள், பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், ஆய்வுகள் மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் துறை சார்ந்த தொழிலகங்களுக்கு உதவி வருகிறது.
உணவு பதப்படுத்துதல் துறை ஆரோக்கியமான முறையில் வளர்வதற்கு உகந்த சூழலை உருவாக்குதல்.
பெரும் உணவுச் சந்தைகளுக்கு ஏற்பாடு செய்தல்.
நவீன இறைச்சிக் கூடங்கள் அமைக்க உதவி. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் செயல்பாடுகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்துதல், உணவு பதப்படுத்துதல் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு உதவி செய்தல்.
உணவுத் துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் தொழில் துறையினர் வேண்டிய உதவிகளைப் பெற வழியமைத்தல்.
துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக தொழில்துறையினர், நிபுணர்கள், விஞ்ஞானிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடுதல்.
கருத்தரங்கு, ஆய்வு உள்ளிட்டவற்றை நடத்துவதற்கான செலவில் 50 சதவீத தொகையை துறையிடமிருந்து பெறலாம். இவை உள்ளிட்ட ஏராளமான விவரங்களை இந்தத் துறையில் ஈடுபட விரும்புவோர் அந்த வலைதளத்தில் பெற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com