ரூ.13,000 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப்பெறும் திட்டத்துக்கு இன்ஃபோசிஸ் நிர்வாக குழு ஒப்புதல்

நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிர்வாக குழு, ரூ.13,000 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப்பெறும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.13,000 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப்பெறும் திட்டத்துக்கு இன்ஃபோசிஸ் நிர்வாக குழு ஒப்புதல்

நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிர்வாக குழு, ரூ.13,000 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப்பெறும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பங்கு ஒவ்வொன்றும் ரூ.1,150 என்ற விலையில் திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த ரூ.923.10 என்ற விலையுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 25 சதவீதம் அதிகமாகும்.
பங்குகளை திரும்பப்பெறும் நடைமுறைகளை மேற்பார்வையிட இன்ஃபோசிஸ் நிறுவனம், ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. அதில், நிறுவனத்தின் இணைத் தலைவர் ரவி வெங்கடேசன், செயல் துணைத் தலைவர் விஷால் சிக்கா, இடைக்கால நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பிரவீண் ராவ், தலைமை நிதி அதிகாரி எம்.டி. ரகுநாத், துணை தலைமை நிதி அதிகாரி யேஷ் சங்ரஜ்கா, பொது ஆலோசகர் இந்தர்பிரீத் சாஹனி, நிறுவனத்தின் செயலர் ஏ.ஜி.எஸ். மணிகண்டா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்ஃபோசிஸ் நிர்வாக குழு ஒப்புதலையடுத்து பங்குகளை திரும்பப்பெறும் சலுகை திட்டத்தின் கீழ் 11.3 கோடி பங்குகள் (4.92 சதவீத பங்குகள்) திரும்பப்பெறப்பட உள்ளதாக பங்குச் சந்தைக்கு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தால் ஒவ்வொரு பங்கும் ஈட்டும் வருவாய் மேம்படும் என்பதுடன் பங்குதாரர்களுக்கும் அதிக வருவாய் கிடைக்கும்.
நடப்பு ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் 350 கோடி டாலர் (சுமார் ரூ.22,750 கோடி) அளவுக்கு ரொக்க கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் முதலிடத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் ஏற்கெனவே ரூ.16,000 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. காக்னிஸன்ட், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் மற்றும் மைண்ட்ரீ உள்ளிட்ட நிறுவனங்களும் இதேபோன்ற அறிவிப்பை முன்னரே வெளியிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com