வலை தகவல்: மத்திய, நடுத்தர சிறு, குறு தொழில் துறை

சிறு தொழில்கள், கிராமப்புற மற்றும் விவசாயத் தொழில்கள் என துறையை இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள்.
வலை தகவல்: மத்திய, நடுத்தர சிறு, குறு தொழில் துறை

வலைதள முகவரி : www.msme.gov.co.in
மத்திய அமைச்சர் : கல்ராஜ் மிஸ்ரா
இணை அமைச்சர்கள் : கிரிராஜ் சிங், ஹரிபாய் பார்த்திபாய்


சிறு தொழில்கள், கிராமப்புற மற்றும் விவசாயத் தொழில்கள் என துறையை இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள்.
துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அளிக்கப்படும் கடன் உதவிகள், தொழில்நுட்ப மேம்பாட்டு உதவிகள் விவரம் கிடைக்கிறது.
நடுத்தர, சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய சிறு தொழில் ஆணையம், தேங்காய் நார் வாரியம், கிராமப்புற வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள காதி மற்றும் ஊரகத் தொழில்கள் வாரியம், கிராம மக்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை இந்தத் துறையின் வரம்புக்குள் உள்ளன.
மகளிர் தொழில் முனைவோருக்கு அளிக்கப்படும் கடனுதவிகள், பயிற்சிகள், மானியங்கள், சிறு, குறு தொழில்களின் பயிற்சி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் குறித்த விவரங்களையும், அவற்றுக்கு விண்ணப்பிக்கும் முறைகளையும் வலைதளத்தின் மூலம் அறியலாம்.
நடுத்தர சிறு, குறு தொழில்களை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்வதற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் இந்த வலைதளம் உதவி புரிகிறது. நமது விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை நமது செல்லிடப்பேசிகளுக்கு வரும் குறுந்தகவல்கள் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும்.
இதுவரை 71.84 லட்சம் சிறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
2006ஆம் ஆண்டின் நடுத்தர, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி சட்டம் உள்ளிட்ட, துறை தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உள்ளன.
துறையின் மூலம் கோரப்படும் ஒப்பந்தப் புள்ளிகள் இந்த வலைதளத்தில் வெளியிடப்பட்டு வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது.
தொகுப்பு: சந்திர. பிரவீண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com