வங்கி டெபாசிட்டுகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பளிக்கும்: அருண் ஜேட்லி

பொதுமக்கள் வங்கிகளில் மேற்கொண்டுள்ள டெபாசிட்டுகளுக்கு முழுமையான பாதுகாப்பை மத்திய அரசு வழங்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வரும் 2018- 19-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக  முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் புது தில்லியில்  திங்கள்கிழமை கலந்தாலோசனை நடத்திய  மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
வரும் 2018- 19-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் புது தில்லியில் திங்கள்கிழமை கலந்தாலோசனை நடத்திய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

பொதுமக்கள் வங்கிகளில் மேற்கொண்டுள்ள டெபாசிட்டுகளுக்கு முழுமையான பாதுகாப்பை மத்திய அரசு வழங்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
வங்கிகளை ஸ்திரப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதிதான், வங்கிகளின் செயல்பாட்டுக்குத் தேவையான ரூ.2.11 லட்சம் கோடி மூலதனத்தை அளிக்கும் திட்டம். இதனால், எந்தவொரு வங்கியும் திவால் நிலைக்கு தள்ளப்பட்டு செயலற்றுப்போகும் என்ற கேள்விக்கே இடமில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் வங்கி வாடிக்கையார்களின் டெபாசிட்டுகளுக்கு தேவையான முழு பாதுகாப்பும் வழங்கப்படும். அந்த முடிவில், மத்திய அரசு மிகவும் தெளிவாக உள்ளது என்றார் அவர்.
நிதி சீரமைப்பு தொடர்பான 'எஃப்ஆர்டிஐ' மசோதா, 2017, கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டு குழு பரிசீலனையில் உள்ளது. இந்த நிலையில், அந்தக் குழு வழங்கும் பரிந்துரைகள் அனைத்தையும் மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் என்று நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 
இந்தப் புதிய வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள நிதி சீரமைப்பு நடவடிக்கையின்படி, பொதுமக்களின் டெபாசிட் மற்றும் சேமிப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வங்கி வாடிக்கையாளர்களின் கவலையைப் போக்கும் விதத்தில் அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பங்கு சந்தைகள் திவால் நிலைக்குத் தள்ளப்படும்பட்சத்தில் தேவையான புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்து 'எஃப்ஆர்டிஐ' மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com