அமிருதசரஸ்-நாந்தேட் நகரங்களுக்கு ஏர் இந்தியா விமான சேவை இன்று தொடக்கம்

பொற்கோயில் அமைந்துள்ள அமிருதசரஸ் மற்றும் குருத்துவாரா அமைந்துள்ள நாந்தேட் நகரங்களை இணைக்கும் வகையில் ஏர் இந்தியா விமான சேவையை தொடங்குகிறது.
அமிருதசரஸ்-நாந்தேட் நகரங்களுக்கு ஏர் இந்தியா விமான சேவை இன்று தொடக்கம்

பொற்கோயில் அமைந்துள்ள அமிருதசரஸ் மற்றும் குருத்துவாரா அமைந்துள்ள நாந்தேட் நகரங்களை இணைக்கும் வகையில் ஏர் இந்தியா விமான சேவையை தொடங்குகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சீக்கியர்களின் புனிதத் தலங்கள் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் நகரையும், மகாராஷ்டிரம் மாநிலம் நாந்தேட் நகரையும் இணைக்கும் வகையில் ஏர் இந்தியா சனிக்கிழமை (டிச.23) விமான சேவையை தொடங்குகிறது.
அமிருதசரஸ்-நாந்தேட்-அமிருதசரஸ் இடையில் வாரத்துக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்களில் இந்த விமான சேவை வழங்கப்படவுள்ளது. இதில், ஏ-320 நியோ ரக விமானம் ஈடுபடுத்தப்படவுள்ளது.
ஏஐ815 விமானம் அமிருதசரஸிலிருந்து பகல் 10.55 மணிக்கு புறப்பட்டு நாந்தேட் நகரத்தை மதியம் 1.30 மணிக்கு சென்றடையும். அதேபோன்று, ஏஐ816 விமானம் நாந்தேட் நகரத்திலிருந்து மதியம் 1.50 மணிக்கு கிளம்பி அமிருதசரஸை மாலை 4.30 மணிக்கு சென்றடையும். இதற்கான கட்டணம் ரூ.7,800ஆக (வரிகள் தனி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவையின் மூலம் வரலாற்று சிறப்புமிக்க இந்த இருநகரங்களுக்கிடையில் சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து கணிசமான அளவில் அதிகரிக்கும் என ஏர் இந்தியா நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com