புதிய பங்கு வெளியீடு: 117 நிறுவனங்கள் ரூ.62,736 கோடி திரட்டல்

நடப்பு நிதி ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் 117 நிறுவனங்கள் ரூ.62,736 கோடி நிதி திரட்டியதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
புதிய பங்கு வெளியீடு: 117 நிறுவனங்கள் ரூ.62,736 கோடி திரட்டல்

நடப்பு நிதி ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் 117 நிறுவனங்கள் ரூ.62,736 கோடி நிதி திரட்டியதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மக்களவையில் தெரிவித்ததாவது: 
நடப்பு 2017-18 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத கால அளவில் மொத்தம் 117 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு ரூ.62,736 கோடியை திரட்டியுள்ளன. இது கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் திரட்டப்பட்ட ஒட்டு மொத்த தொகையான ரூ.62,147 கோடியைக் காட்டிலும் அதிகம். 
பங்கு வெளியீட்டை மேற்கொண்ட 117 நிறுவனங்களில் 28 பெரிய நிறுவனங்களாகும். ஏனையவை சிறிய மற்றும் நடுத்தர வகையைச் சேர்ந்தவை.
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (ஜிஐசி) புதிய பங்கு வெளியீடு மூலம் அதிகபட்சமாக ரூ.11,176 கோடியை திரட்டியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபரில் கோல் இந்தியா இதே வழிமுறையில் ரூ.15,000 கோடியை திரட்டியது. அதற்கு பிறகு, பொதுத்துறை நிறுவனமொன்று இந்த அளவுக்கு நிதி திரட்டுவது இதுவே முதல்முறை.
ஜிஐசியைத் தொடர்ந்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ரூ.9,467 கோடியும், ஹெச்டிஎஃப்சி ரூ.8,695 கோடியும், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் ரூ.8,386 கோடியும், ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் ரூ.5,700 கோடியும் திரட்டியுள்ளன.
கடந்த 2016-17இல் புதிய பங்கு வெளியீடு மூலம் 106 நிறுவனங்கள் ரூ.29,104 கோடியை திரட்டின. 2015-16இல் 74 நிறுவனங்கள் ரூ.14,185 கோடியை திரட்டின. 
மேலும், ஐபிஓ வாயிலாக, 2014-15இல் 46 நிறுவனங்கள் ரூ.3,039 கோடியும், 2013-14இல் 40 நிறுவனங்கள் 8,692 கோடியும், 2012-13இல் 33 நிறுவனங்கள் ரூ.6,497 கோடியும் திரட்டியது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com