இயற்கை ரப்பர் உற்பத்தி 27% அதிகரிப்பு

நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி சென்ற ஜனவரி மாதத்தில் 27 சதவீதம் அதிகரித்தது.
இயற்கை ரப்பர் உற்பத்தி 27% அதிகரிப்பு

நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி சென்ற ஜனவரி மாதத்தில் 27 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு ஆண்டு ஜனவரியில் இயற்கை ரப்பர் உற்பத்தி 66,000 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் உற்பத்தியான 52,000 டன்னுடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் அதிகமாகும். இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக அதன் இறக்குமதி 39,512 டன்னிலிருந்து 39 சதவீதம் சரிவடைந்து 24,093 டன்னாக காணப்பட்டது.
அதே சமயம், உள்நாட்டில் இயற்கை ரப்பர் பயன்பாடு 84,875 டன்னிலிருந்து 1 சதவீதம் குறைந்து 84,000 டன்னாக இருந்தது. சென்ற ஜனவரி மாதம் இறுதி நிலவரப்படி 2.77 லட்சம் டன் இயற்கை ரப்பர் கையிருப்பில் உள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத கால அளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி 15 சதவீதம் அதிகரித்து 5.65 லட்சம் டன்னாகவும், அதன் பயன்பாடு 5 சதவீதம் உயர்ந்து 8,59,930 டன்னாகவும் காணப்பட்டது.
அதே சமயம், அதன் இறக்குமதி 3,98,487 டன்னிலிருந்து 3.38 சதவீதம் குறைந்து 3,85,017 டன்னாக இருந்தது என்று ரப்பர் வாரியம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com