ஆண்டின் கடைசி வர்த்தக தினத்தில் விலை சரிந்த தங்கம்

2016-ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக தினமான சனிக்கிழமை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவை சந்தித்தது.
ஆண்டின் கடைசி வர்த்தக தினத்தில் விலை சரிந்த தங்கம்

2016-ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக தினமான சனிக்கிழமை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவை சந்தித்தது.
பண்டிகை தினங்களையொட்டி தங்கத்துக்கான தேவை சூடுபிடித்ததையடுத்து அதன் விலை நான்கு வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலையில், சர்வதேச சந்தை மற்றும் ஆபரண விற்பனையாளர்களிடையே தங்கத்துக்கான தேவை குறைந்து போனதையடுத்து ஆண்டின் கடைசி வர்த்தக தினமான சனிக்கிழமை அதன் விலை ரூ.200 சரிவடைந்தது. இதையடுத்து, 10 கிராம் தங்கம் ரூ.28,300-க்கு விற்பனையானது. அதேபோன்று, வெள்ளியின் விலையும் ரூ.500 சரிவடைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.39,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. நாணயங்கள் உற்பத்தி மற்றும் ஆலைகளில் வெள்ளியின் பயன்பாடு குறைந்து போனதே விலை சரிவுக்கு காரணமாக கூறப்பட்டது.
சென்ற 2016-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளான, ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலக நடைபெற்ற பிரெக்ஸிட் வாக்கெடுப்பு, சீன சந்தையில் ஏற்பட்ட கடுமையான ஏற்ற தாழ்வு, உலக நாடுகளின் பொருளாதாரத்தில் காணப்பட்ட மந்தநிலை போன்றவற்றுக்கிடையிலும் தங்கத்தின் மீதான முதலீடே லாபம் தரக்கூடியது என்பதும், மிகவும் பாதுகாப்பானது என்பதும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ரூ.25,390-ஆக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை நவம்பர் 9-ஆம் தேதி ரூ.31,750-ஆக எகிறியது.
சென்ற ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.2,910 அல்லது 11.46 சதவீதம் அதிகரித்தது. அதேபோன்று வெள்ளியின் விலையும் ரூ.6,100 அல்லது 19 சதவீதம் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, தங்கம் மற்றும் வெள்ளியில் மேற்கொள்ளப்படும் முதலீடு ஒருபோதும் வீண்போவதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com