பங்குச் சந்தையில் ஏற்றமிகு வாரம்

உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பால் இந்திய பங்குச் சந்தைகளுக்கு கடந்த வாரம் ஏற்றம் மிகுந்ததாக இருந்தது. இதனால், இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த பங்குச் சந்தைகள் கடந்த வாரத்தில் எழுச்சி கண்டது.
பங்குச் சந்தையில் ஏற்றமிகு வாரம்

உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பால் இந்திய பங்குச் சந்தைகளுக்கு கடந்த வாரம் ஏற்றம் மிகுந்ததாக இருந்தது. இதனால், இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த பங்குச் சந்தைகள் கடந்த வாரத்தில் எழுச்சி கண்டது.
அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகளை முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அதில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்களை அறிவிக்கும் என்ற நிலைப்பாட்டால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் வரி வசூல் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதுவும், பங்குச் சந்தைகளுக்கு கூடுதல் வலு சேர்த்தது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள் கவனம் இந்திய பங்குச் சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த வாரத்தில் ரூ.3,557.01 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் துறை நிறுவனப் பங்குகளின் விலை அதிகபட்சமாக 5.41 சதவீதம் அதிகரித்தது. நுகர்வோர் சாதனங்கள் துறை பங்குகளின் விலை 3.31 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 2.77 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 2.40 சதவீதமும், மோட்டார் வாகனம் 1.87 சதவீதமும் அதிகரித்தது.
இவை தவிர, மின்சாரம் (1.47%), பொதுத் துறை (1.37%), பொறியியல் பொருள்கள் (1.30%), உலோகம் (1.21%), தொழில்நுட்பம் (1.13%), மருந்து (1.07%) உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெற்றன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், ஐ.டி.சி. பங்கின் விலை 7.18 சதவீதமும், ஹிந்துஸ்தான் யுனிலீவர் 4.47 சதவீதமும் உயர்ந்தன.
கோல் இந்தியா (4.13%), பார்தி ஏர்டெல் (3.33%), எச்.டி.எப்.சி. (3.41%), டி.சி.எஸ். (3.13%), விப்ரோ (3.06%), லூபின் (2.65%), ஆக்சிஸ் வங்கி (2.63%), மாருதி (2.50%), என்.டி.பி.சி. (2.20%), இன்ஃபோசிஸ் (2.16%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (2.07%) நிறுவனப் பங்குகளின் விலையும் கணிசமான அளவுக்கு அதிகரித்தன.
மேலும், ஏஷியன் பெயிண்ட்ஸ் 2.01 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 1.96 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் 1.62 சதவீதமும், கெயில் 1.47 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 1.33 சதவீதமும், எச்.டி.எப்.சி. வங்கி 1.14 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.12 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா 1.08 சதவீதமும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 585 புள்ளிகள் (2.25%) அதிகரித்து 26,626 புள்ளிகளாக நிலைத்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.11,869.82 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 200 புள்ளிகள் (2.51%) உயர்ந்து 8,185 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.77,385.17 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com