இயற்கை ரப்பர் உற்பத்தி 4.28 லட்சம் டன்

நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி நடப்பு நிதி ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 4.28 லட்சம் டன்னை எட்டியது.
இயற்கை ரப்பர் உற்பத்தி 4.28 லட்சம் டன்

நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி நடப்பு நிதி ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 4.28 லட்சம் டன்னை எட்டியது.

கடந்த நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத கால அளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி 3.82 லட்சம் டன்னாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் இதன் உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்து 4.28 லட்சம் டன்னை எட்டியது. ரப்பர் பயன்பாடும் 6,51,790 டன்னிலிருந்து 6.2 சதவீதம் வளர்ச்சி கண்டு 6,92,430 டன்னாக இருந்தது.
தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உள்நாட்டில் ரப்பர் உற்பத்தி இல்லாததால் வெளிநாடுகளிலிருந்து அதனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. ரப்பர் இறக்குமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிகரித்து 3,38,121 டன்னாக இருந்தது. இதன் ஏற்றுமதி 434 டன்னிலிருந்து உயர்ந்து 1,287 டன்னாக காணப்பட்டது.
குறிப்பாக, நவம்பரில் இயற்கை ரப்பர் உற்பத்தி 19 சதவீதம் அதிகரித்து 63,000 டன்னாகவும், பயன்பாடு 88,000 டன்னாகவும், இறக்குமதி 22 சதவீதம் உயர்ந்து 43,123 டன்னாகவும், ஏற்றுமதி 637 டன்னாகவும் காணப்பட்டது. மேலும், ரப்பர் கையிருப்பு 2.7 லட்சம் என்ற அளவில் இருந்தது.
கடந்த நிதி ஆண்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி 13 சதவீதம் சரிவடைந்து 5.62 லட்சம் டன்னாக காணப்பட்டது. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் இதன் உற்பத்தி 16 சதவீதம் அதிகரித்து 6.54 லட்சம் டன்னாக இருக்கும் என்று ரப்பர் வாரியம் மதிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com