நிறுவன வரி விதிப்பை 18% குறைக்க சி.ஐ.ஐ. கோரிக்கை

வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான வரி விதிப்பை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.), மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான வரி விதிப்பை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.), மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் நிறுவனங்களுக்கான வரி விகிதம் 30 சதவீதமாக உள்ளது. இதனுடன் சேர்த்து தீர்வை மற்றும் கூடுதல் வரிகளும் விதிக்கப்படுகின்றன. நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இந்த வரி விகிதம் மிகப் பெரும் தடையாக உள்ளது.
வரும் 2017-18-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 30 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும். தீர்வை மற்றும் கூடுதல் வரிகள் அனைத்தும் அந்த 18 சதவீதத்துக்குள்ளாகவே இருக்க வேண்டும். அதனுடன் சேர்த்து எல்லாவித வரி ஊக்குவிப்பு மற்றும் தள்ளுபடி சலுகைகளை நீக்கி விட வேண்டும்.
இதுதவிர, வரும் பட்ஜெட்டில் ரூ.10,000 கோடியில் தேசிய கண்டுபிடிப்பு நிதியத்தை அமைக்கவும்,வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் மத்திய நிதி அமைச்சகத்தை, சி.ஐ.ஐ. வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com