"பிரபல நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக பதஞ்சலி'

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் சந்தையில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவது அசோசேம்-டெக்ஸி ரிசர்ச் நிறுவனங்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. சென்ற 2016-இல் இந்த நிறுவனம் 146 சதவீதம் வளர்ச்சி கண்டு அதன் விற்றுமுதல் ரூ.5,000 கோடியை (76.9 கோடி டாலர்) தொட்டுள்ளது. இத்துறையில் கோலோச்சி வரும் பிரபல நிறுவனங்களான ஐ.டி.சி. டாபர், ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோல்கேட்-பாமோலிவ், புராக்டர் அண்ட் கேம்பிள் ஆகியவை இரண்டு இலக்கத்துக்கும் குறைவாகவே வளர்ச்சியை எட்டிப் போராடி வரும் நிலையில், பதஞ்சலியின் இந்த வளர்ச்சி மலைக்க வைப்பதாக உள்ளது.
முன்னர் ஆயுர்வேத மருந்து தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வந்த இந்த நிறுவனம், தற்போது உணவு, அழகு சாதனப் பொருள்கள் என 500-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது. இதில், பெரும்பாலானவை வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் பிரிவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com