புதிய செல்லிடப்பேசி ஆலை தொடங்க ஜியோனி மும்முரம்

செல்லிடப்பேசி ஆலை அமைக்கும் பணியில் ஜியோனி நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

செல்லிடப்பேசி ஆலை அமைக்கும் பணியில் ஜியோனி நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
ஜியோனி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அரவிந்த் வோரா தெரிவித்ததாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் செல்லிடப்பேசி ஆலையை தொடங்க ஜியோனி ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாத் நகரில் 50 ஏக்கர் பரப்பளவில் செல்லிடப்பேசி தயாரிப்பு ஆலையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஜியோனி ரூ.500 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
அந்த ஆலை ஆண்டுக்கு 3 கோடி செல்லிடப்பேசிகளை தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இரண்டு ஆண்டுகளில் அந்த ஆலை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு செல்லிடப்பேசி சந்தையை வெகுவாக பாதித்துள்ளது. அந்த அறிவிப்பு வெளியான முதல் மூன்று நாட்களில் மட்டும் விற்பனை 20 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டது. தற்போது நிலைமை மேம்பட்டுள்ளதையடுத்து, விற்பனை பாதிப்பு 8-10 சதவீத அளவுக்கே உள்ளது. இதுவும் தாற்காலிகமானதே. பணப்புழக்கம் சீரடையும் நிலையில், செல்லிடப்பேசி விற்பனை சகஜ நிலைக்குத் திரும்பும்.
நீண்ட கால அடிப்படையில் இந்தியாவில் செல்லிடப்பேசிகளைத் தயாரித்து, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
தற்போதைய நிலையில் ஜியோனி நிறுவனத்தின் 60 சதவீத செல்லிடப்பேசிகள் இந்தியாவில் விற்பனையாகின்றன. தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் மற்றும் நொய்டாவில் டிக்ஸன் ஆலைகளில் ஜியோனி நிறுவனத்தின் செல்லிடப்பேசிகள் தயாராகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com