அசோக் லேலண்ட் வாகன விற்பனை 12% குறைந்தது

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை 12 சதவீதம் குறைந்தது.

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை 12 சதவீதம் குறைந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: அசோக் லேலண்ட் நிறுவனம் சென்ற டிசம்பரில் 10,731 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த 2015-ஆம் ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 12,154 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீத சரிவாகும்.
கனரக மற்றும் நடுத்தர வகை வர்த்தக வாகனங்களின் விற்பனை 9,703 என்ற எண்ணிக்கையிலிருந்து 9 சதவீதம் சரிந்து 8,782-ஆக காணப்பட்டது. இலகு ரக வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 20 சதவீதம் குறைந்து 1,949-ஆக காணப்பட்டது என்று அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com