டாடா மோட்டார்ஸ் விற்பனை 2% அதிகரிப்பு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை 2 சதவீதம் அதிகரித்தது.
டாடா மோட்டார்ஸ் விற்பனை 2% அதிகரிப்பு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை 2 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: டாடா மோட்டார்ஸ் சென்ற டிசம்பர் மாதத்தில் 40,944 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 39,973 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 35 சதவீதம் அதிகரித்து 10,827-ஆகவும்; வர்த்தக வாகனங்கள் விற்பனை 9 சதவீதம் சரிந்து 24,998-ஆகவும் இருந்தன. ஏற்றுமதி 4,557 என்ற எண்ணிக்கையிலிருந்து 12 சதவீதம் உயர்ந்து 5,119-ஆக இருந்தது என்று டாடா மோட்டார்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com