ரெனோ கார் விற்பனை 9% உயர்வு

ரெனோ இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை டிசம்பரில் 9.2 சதவீதம் அதிகரித்தது.
ரெனோ கார் விற்பனை 9% உயர்வு

ரெனோ இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை டிசம்பரில் 9.2 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுமித் சாஹ்னி தெரிவித்ததாவது:
ரெனோ நிறுவனத்தின் கார்கள் விற்பனை சென்ற டிசம்பரில் 9.2 சதவீதம் அதிகரித்து 11,244-ஆக இருந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டின் இதே கால அளவில் கார் விற்பனை 10,292-ஆக காணப்பட்டது. சென்ற 2016-இல் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாத கால அளவில் கார் விற்பனை 146 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,32,235-ஆக இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய மாடல் அறிமுகம் என்ற அடிப்படையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் புதிய தயாரிப்புகளை சந்தையில் தொடர்ந்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com