பஜாஜ் ஆட்டோ விற்பனை 22% வீழ்ச்சி

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை 22 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை 22 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சென்ற டிசம்பர் மாதத்தில் 2,25,529 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 2,89,003 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம் சரிவாகும்.
மோட்டார் சைக்கிள் விற்பனை 2,47,782 என்ற எண்ணிக்கையிலிருந்து 18 சதவீதம் குறைந்து 2,03,312-ஆக காணப்பட்டது. மேலும், வர்த்தக வாகனங்கள் விற்பனை 48 சதவீதம் குறைந்து 22,217-ஆக இருந்தது.
இதேபோன்று வாகன ஏற்றுமதியும் 1,45,477 என்ற எண்ணிக்கையிலிருந்து 27 சதவீதம் சரிந்து 1,05,804-ஆக இருந்தது என்று பஜாஜ் ஆட்டோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com