பி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு "செபி' அனுமதி

மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) பொதுப் பங்கு வெளியீட்டில் இறங்கி நிதி திரட்ட, பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையமான "செபி' தனது இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.

மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) பொதுப் பங்கு வெளியீட்டில் இறங்கி நிதி திரட்ட, பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையமான "செபி' தனது இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதுகுறித்து மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளதாவது:
மும்பை பங்குச் சந்தை, பொதுப் பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ.) இறங்கி நிதி திரட்ட செபியிடம் அனுமதி கோரி கடந்த செப்டம்பரில் விண்ணப்பித்தது. அதற்கான இறுதி ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் ரூ.1,500 கோடியை திரட்டிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, ஏற்கெனவே உள்ள பங்குதாரர்களுக்கு கோரிக்கை அடிப்படையிலான விற்பனை (ஓ.எப்.எஸ்.) மூலம் 2,99,55,434 பங்குகள் ஒதுக்கப்பட உள்ளன என்று மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
பஜாஜ் ஹோல்டிங்ஸ் இன்வெஸ்ட்மென்ட், கால்டுவெல் இந்தியா ஹோல்டிங்ஸ், அகசியா பன்யான் பார்ட்னர்ஸ், சிங்கப்பூர் எக்சேஞ்ஜ் உள்ளிட்டவை மும்பை பங்குச் சந்தையின் பங்குதாரர் நிறுவனங்களாகும்.
மும்பை பங்குச் சந்தையின் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். செபி விதிமுறைப்படி இந்த பங்குகளை மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com